தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் ...


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
(தொழிலாளர் உதவி ஆணையர், (சமூக பாதுகாப்புத் திட்டம்), 19. பெரியமில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் கீழே குறிப்பிட்டுள்ள படி நிலைப்படி இவ்வலுவலகம் இயங்கிவருகிறது).

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்

தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள்

  1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
  2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்.
  3. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்,
  4. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்
  5. தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்.
  6. தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம்
  7. தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்
  8. தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்.
  9. தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்.
  10. தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்
  11. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
  12. தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
  13. தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம்.
  14. தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம்.
  15. தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்
  16. தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்,
  17. தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழில் இனங்கள் ஆகிய 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

53 வகையான கட்டுமானத் தொழில்கள்

    1. கல் உடைப்பவர் (அ) கல் வெட்டுபவர் (அ) கல் பொடி செய்பவர்.
    2. கொத்தனார் (அ) செங்கல் அடுக்குபவர்.
    3. தச்சர்
    4. பெயிண்டர் அல்லது வார்னிஷ் பூசுபவர்
    5. கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர்
    6. சாலை குழாய் பதிப்பு பணியாளர்
    7. எலக்ட்ரிஷியன்
    8. மெக்கானிக்
    9. கிணறு தோண்டுபவர்
    10. வெல்டர்
    11. தலைமை கூலியாள்
    12. கூலியாள்
    13. தெளிப்பவர் மற்றும் கலப்பவர் (சாலை பரப்பும் பணி)
    14. மரம் அல்லது கல் அடைப்பவர்
    15. கிணற்றில் தூர் எடுப்பவர்
    16. சம்மட்டி ஆள்
    17. கூரை வேய்பவர்
    18. மேஸ்திரி
    19. கருமான், கொல்லன்
    20. மரம் அறுப்பவர்
    21. சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர்
    22. கான்க்ரீட் மிக்ஸர் அப்ரேட்டர் உட்பட கலப்பவர்
    23. பம்ப் ஆபரேட்டர்
    24. மிக்ஸர் டிரைவர்
    25. ரோலர் டிரைவர்
    26. கனரக இயந்திர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கலாசிஸ் மற்றும் சுரங்க பணியாளர்
    27. காவலாளி
    28. மொசைக் பாலீஸ் செய்பவர்
    29. சுரங்க வழி தோண்டுபவர்
    30. பாறை உடைப்பவர் குவாரி வேலையாள்
    31. சலவைக்கல் / கடப்பாக்கல் வேலையாள்
    32. சாலை பணியாளர்
    33. கட்டுமானப் பணி தொடர்பான மண் வேலை செய்பவர்
    34. சுண்ணாம்பு பதப்படுத்துவோர்
    35. கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்
    36. அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பாலங்கள், சாலை அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளர்கள்
    37. அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பாலங்கள், சாலை அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளர்கள்
    38. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராத செங்கல் சூளை தொழிலாளர்கள்
    39. பந்தல் கட்டுமானம்
    40. தீயனைப்பு கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
    41. குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
    42. மின்தூக்கி மற்றும் மின்படி பொருத்துதல்
    43. பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்
    44. இரும்பு மற்றும் உலோக கிராதி ஜன்னல் கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்
    45. நீர் எடுக்கும் கட்டமைப்பு தொடர்பான கட்டுமானம்
    46. கார்பெட்டிங், பொய்கூரை விளக்கு அமைத்தல், மேற்பூசுதல் தொடர்பான உள்ளலங்காரம்
    47. கண்ணாடி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணாடி பேனல்கள் பொருத்துதல்
    48. சோலார் பேணல் போன்ற மின்மிகை சாதனங்கள் பொருத்துதல்
    49. சமையல் கூடம் போன்ற இடங்களில் நவீன அறைகள் அமைத்தல்
    50. முள் புனைத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் பொருட்கள் பொருத்துதல்
    51. கோல்ப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை கட்டுதல்
    52. கல்பெயர் பலகை, தெரு அறைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணிமனைகள் நிறுத்தங்கள் மற்றும் அறிவிப்பு குறி போன்ற கட்டுமானம் மற்றும் நிறுத்துதல்
    53. ரோட்டரி மற்றும் செயற்கை நீருற்று போன்ற கட்டுமானம்
    54. பொது பூங்கா நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலைக்காட்சி அமைத்தல்

2. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்
மற்றும் 15 நல வாரியங்கள்
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் 17,03,1999 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது, இவ்வாரியங்கள் மூலம் நலத்திட்டங்களில் பட்டியல் இடப்பட்ட தொழில் இனங்கள் ஆகிய 60 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

60 வகையான அமைப்புசாரா தொழில்கள்

    • சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், தூக்கிச் செல்லுதல், எடைபோடுதல், அளவிடுதல் அல்லது இத்தகைய வேலைகளுக்கான ஆயத்த அல்லது இது தொடர்பான பணி உள்ளிட்ட உடலுழைப்பு வேலைகளில் ஈடுபடுதல்.
    • சந்தை அல்லது கடை அல்லது டிப்போ அல்லது தொழிற்சாலை அல்லது சேமிப்புக் கிடங்கு அல்லது கிடங்கு அல்லது இதர நிறுவனம்.
    • 1948-ஆம் வருட துறைமுகத் தொழிலாளர்கள் சட்டத்திற்குட்படாத துறைமுகங்கள்,
    • இரயில்வே நிர்வாகத்தால் பணியமர்த்தப்படாத உடலுழைப்புத் தொழிலாளர்கள் பணிபுரியும் இரயில்வே யார்டுகள் மற்றும் குட்ஸ்ஷெட்டுகள்.
    • 1959- ஆம் வருட தமிழ்நாடு வேளாண் விளை பொருள் சந்தைகள் சட்டத்தால் அமைக்கப்பட்ட சந்தைக் குழுக்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட சந்தை.
  1. பொது போக்குவரத்து வாகனங்களில் சுமை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் அது தொடர்பான இதர வேலைகள்.
  2. உணவு தானியங்கள் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லுதல், உணவு தானியங்களை பிரித்தல் மற்றும் சுத்தம் செய்தல், உணவு தானியங்களை பைகளில் நிரப்புதல் மற்றும் அந்த பைகளை தைத்தல் மற்றும் இதன் தொடர்புடைய இதர வேலைகள்,
  3. உப்பளங்களில் வேலை செய்தல்
  4. கள் இறக்கும் தொழில்
  5. படகு பணி
  6. மரத்தொழில்
  7. கயிறு தொழில்
  8. தோல் பதனிடுதல் மற்றும் தோல் உற்பத்தி
  9. தானியங்கி பணிமனையில் (ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப்) பணிபுரிதல்)
  10. அப்பளம் தயாரித்தல்
  11. வெளுத்தல் மற்றும் சாயத் தொழில்
  12. மாட்டு வண்டி ஓட்டுதல்
  13. உணவு சமைத்தல்
  14. தேங்காய் உரித்தல்
  15. வனப்பொருட்கள் சேகரித்தல்
  16. உணவு நிறுவனங்களில் பணிபுரிதல்
  17. முந்திரி தொழில்
  18. ஆட்டோ, டாக்சி, வேன், டெம்போ, லாரி மற்றும் பேருந்து ஓட்டுதல் (அரசுத் துறை வாகனங்கள் நீங்கலாக)
  19. எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகித்தல்
  20. சைக்கிள் ரிக்ஷா ஓட்டுதல்
  21. பொறியியல் தொழில்
  22. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்
  23. துணி மடிக்கும் தொழில்
  24. காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரித்தல்
  25. சாக்குத் தொழில்
  26. தங்க, வெள்ளி ஆபரணங்கள் தயாரித்தல்
  27. கைத்தறி மறறும் கைத்தறி பட்டு நெய்தல்
  28. அகர்பத்தி தயாரித்தல்
  29. துணி துவைத்தல் மற்றும் சலவை இடுதல்
  30. பதநீர் இறக்குதல்
  31. பேனா எழுதுமுனை தயாரித்தல்
  32. மாவு ஆலை, எண்ணெய் ஆலை, பருப்பு ஆலை மற்றும் அரிசி ஆலையில் பணிபுரிதல்
  33. அச்சகங்களில் பணிபுரிதல்
  34. விசைத்தறித் தொழில்
  35. தனியார் பாதுகாவல் பணிகள்
  36. பிளாஸ்டிக் தொழில்
  37. மண்பாண்டத் தொழில்
  38. குப்பைகள் சேகரித்தல்
  39. முடித்திருத்துதல் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரிதல்
  40. தெரு வியாபாரம்
  41. ஜவ்வரிசி தொழில்
  42. செயற்கை வைரம் வெட்டுதல்
  43. பட்டுப்புழு வளர்த்தல்
  44. கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிதல்
  45. தையல் தொழில்
  46. மரம் ஏறுதல்
  47. தகர அடைப்பான்கள் தயாரித்தல்
  48. பாத்திரங்கள் தயாரித்தல்
  49. மரவேலைக் கூடங்களில் பணிபுரிதல்
  50. வீட்டுவேலைகளில் பணிபுரிதல்
  51. சைக்கிள் பழுது பார்த்தல்
  52. கல் மற்றும் பிற பொருட்களில் சிற்ப வேலைகள் செய்தல்
  53. களிமண், காகித கூழ் உட்பட பிற பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்தல்
  54. சுருட்டு தயாரித்தல்
  55. ஓவியர்கள்
  56. ஒலி மற்றும் ஒளி அமைத்தல்
  57. எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உபகரணங்களை பழுது பார்த்தல் மற்றும் சீர் செய்தல்
  58. வார்த்து வடித்தல்

வாரியங்களில் பதிவு செய்வதற்கான தகுதிகள் / வழிமுறைகள்:-

  1. விண்ணப்பதாரர் 18 முதல் – 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
  2. தொழிலாளி தனது புகைப்படம் ஒன்றை விண்ணப்பத்தில் ஒட்டி, மற்றொரு புகைப்படத்தை ஒரு உறையில் வைத்து விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் அளித்து ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
  3. பதிவு கட்டணம் ஏதும் இல்லை.
  4. பதிவு விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளவர் என்பதற்கான சான்று கீழ்க்கண்ட எவரேனும் ஒருவரால் அளிக்கப்பட வேண்டும்.
    • வேலையளிப்பவர்,
    • பதிவு பெற்ற ஒப்பந்ததாரர் (கட்டுமான வாரியம் மட்டும்).
    • கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அரசு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் (கட்டுமான வாரியம் மட்டும்).
      பதிவு பெற்ற தொழிற் சங்கம்.
    • கிராம நிர்வாக அலுவலர்
      (வருவாய் ஆய்வாளர் – சென்னை மாவட்டத்தில் மட்டும்),
    • தொழிலாளர் உதவி ஆய்வாளர் அல்லது உதவி இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 15 நல வாரியங்களுக்கு மட்டும்).
  5. பதிவு விண்ணப்பத்தில், தொழிலாளர் செய்யும் வேலை குறித்த பணிச்சான்றினை தொழிற்சங்கம் வழங்கியிருந்தால், தொழிற்சங்கப் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய முத்திரை இடம் பெற்றிருக்க வேண்டும்.
  6. வயது/ இருப்பிடம் தொடர்பாக கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் சான்றொப்பமிட்ட நகலினை (Attested Copy) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  7. பிறப்பு / இறப்பு பதிவாளரின் சான்று.
  8. பள்ளி அல்லது கல்லுரிச்சான்று
  9. வாகன ஓட்டுநர் உரிம நகல்,
  10. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை,
  11. சான்றொப்பமிட்ட குடும்ப அடையாள அட்டை
  12. அரசு மருத்துவரிடமிருந்து
    (சிவில் சர்ஜன் தரத்திற்கு குறையாதவரிடம் பெறப்பட்ட வயது குறித்த சான்று – அசலில்)
  13. தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு.

பதிவினை புதுப்பித்தல்

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும், புதுப்பித்தலுக்கு கட்டணம் ஏதும் இல்லை, 60 வயது நிறைவடைந்த தொழிலாளியின் பதிவினை புதுப்பிக்க இயலாது, உறுப்பினரால் அளிக்கப்படும் புதுப்பித்தல் விண்ணப்பம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பெறப்பட்டு, உரிய சரிபார்த்தலுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டு அடையாள அட்டை உறுப்பினருக்கு திரும்ப அளிக்கப்படும்.

இரண்டாம்படி அடையாள அட்டை (Duplicate I.D.Card)

இரண்டாம்படி அடையாள அட்டை வழங்கக் கோரும் மனு தொழிலாளரின் விண்ணப்பத்தின் மீது விசாரணை மேற்கொண்டு இரண்டாம்படி அடையாள அட்டை (Duplicate ID. Card) கோரும் நபர் அவர்தானா என உறுதி செய்து தொழிலாளர் உதவி ஆணையரால் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இரண்டாம்படி அடையாள அட்டை வழங்கப்படும். (இரண்டாம்படி அடையாள அட்டை பெற ரூ.20/- கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்).

பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

விவரம் ரூ
திருமணம்
(குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) தொழிலாளர் (அ) தனது மகன் (அ) மகள் திருமணத்திற்கு
3,000/-
(ஆண்)
5,000/-
(பெண்)
மகப்பேறு
பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு
(முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்)
6,000/-
கருக்கலைப்பு/ கருச்சிதைவு (பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு இரு முறை மட்டும்) 3,000/-
 கல்வி
(ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்)
 அ) 10-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)  1,000/
 ஆ) 11-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)  1,000/
 இ) 12-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்)  1,500/-
 ஈ) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி  1,000/-
 உ) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி  1,500/-
ஊ) பட்டப்படிப்பு

முறையான பட்டப்படிப்பு

1,500/-
விடுதியில் தங்கிப் படித்தால்  1,750/-
எ) பட்ட மேற்படிப்பு
முறையான பட்டமேற்படிப்பு
 4,000/-
விடுதியில் தங்கிப் படித்தால்  5,000/-
ஏ) தொழிற்நுட்பப் பட்ட படிப்பு
சட்டம், பொறியியல்,
மருத்துவம், கால்நடை
மருத்துவம் போன்ற
தொழிற்நுட்பப் பட்ட படிப்பு
4,000/-
விடுதியில் தங்கிப் படித்தால் 6,000/-
ஐ) தொழிற்நுட்பப் பட்டமேற்படிப்பு 6,000/-
விடுதியில் தங்கிப் படித்தால் 8,000/-
ஒ) ஐ.டி.ஐ. அல்லது
பாலிடெக்னிக் படிப்பு
1,000/-
விடுதியில் தங்கிப் படித்தால் 1,200/
கண் கண்ணாடி
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதலில் விண்ணப்பிக்கும் 65 தொழிலாளர்களுக்கு மட்டும்.
500/-க்கு மிகாமல்
ஓய்வூதியம்
60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும் அல்லது 60 வயதினை நிறைவு செய்யாதிருந்தாலும் பதிவு செய்திருந்து நோயின் காரணமாக வழக்கமான பணி செய்ய இயலாமல் முடக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
 1.000/- மாதம் ஒன்றிற்கு
குடும்ப ஓய்வூதியம்
ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளி இறந்துவிட்டால் அவரது கணவர்/ மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் 
400/- மாதம் ஒன்றிற்கு
விபத்து மரணம் –
(கட்டுமானத் தொழிலாளி 11.12.2014-க்கு பிறகு
பணியின்போது பணியிடத்தில் விபத்து மரணம் நிகழ்ந்தாலும், 01.03.2016-க்கு பிறகு பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளி பணியிடத்தில் இறந்தாலும்)
5,00,000/-
01.03.2011-க்கு பிறகு பணியிடம் அல்லாத இடத்தில் விபத்தில் இறந்தாலும்  1,00,000/-
விபத்து ஊனம்
உடல் உறுப்பு இழப்பு அல்லது உடல் உறுப்பு துண்டிக்கப்படுதல் அல்லது நிரந்தரமாக உடல் உறுப்பு செயல் இழப்பு ஏற்பட்டால் ஊனத்திற்கு தகுந்தாற்போல் இழப்பீட்டுத் தொகை
1,00,000/-
வரை
விபத்து ஊன உதவித் தொகையினை தவிர ஊனத்தின் தன்மைக்கேற்ப செயற்கை உறுப்புகள் / சக்கர நாற்காலி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்,
இயற்கை மரணம்
நியமனதாரருக்கு மட்டும் (17.11.2017 க்கு பிறகு)
20,000/-
ஈமச்சடங்கு
நியமனதாரருக்கு மட்டும் (17.11.2017 க்கு பிறகு)
5,000/-

நல உதவி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

பொதுவான ஆவணங்கள்

அசல் அடையாள அட்டை
வங்கி கணக்கு, ஆதார் அட்டை

திருமணம்

திருமண அழைப்பிதழ்
திருமணம் நடைபெற்றதற்கான சான்று
திருமணம் செய்து கொள்பவர்
ஆண் எனில் 21 வயதும், பெண் எனில் 18 வயதும் நிறைவு செய்தார் என நிரூபிக்கும் வயது சான்றிதழ்,

மகப்பேறு

அசல் பிறப்பு சான்றிதழ்
குறைப்பிரசவம்/ கருக்கலைப்பு எனில் பதிவு பெற்ற மருத்துவரின் சான்று. (உதவி சிவில் சர்ஜன் தரத்தில்)

கல்வி
  1. கல்வி பயிலும் ஆண்டிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
  2. பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்றிதழ் பதிவு பெற்ற தொழிலாளியின் மகள் என்றும் கல்வி பயிலும் ஆண்டினையும் குறிப்பிட வேண்டும்.
  3. சான்றொப்பமிட்ட தேர்ச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல் / பள்ளி மாற்று சான்றிதழ்.
  4. கல்லுரி படிப்பில் சேர்ந்து பயில்வது குறித்தான கல்வி நிலைய முதல்வரிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ்.
  5. விடுதியில் தங்கி படிப்பவர் முதல்வரிடம் அல்லது விடுதி காப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட சான்று.
கண் கண்ணாடி

கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று கண் கண்ணாடி வாங்கியதற்கான அசல் பற்றுச் சீட்டு

ஓய்வூதியம்

இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ.

முடக்க ஓய்வூதியம்

இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ, மருத்துவச் சான்று அரசு சிவில் சர்ஜனால் வழங்கப்பட்டது, (முடக்க ஓய்வூதியத்திற்கு மட்டும்)

குடும்ப ஓய்வூதியம்

இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஓய்வூதியதாரரின் அசல் இறப்பு சான்றிதழ், வாரிசு உரிமைச் சான்றிதழ்

விபத்து மரணம்

அசல் இறப்பு சான்றிதழ், முதல் தகவல் அறிக்கை (FIR), பிரேதப் பரிசோதனை அறிக்கை.

விபத்து மரணம்

(உதவித் தொகை, உதவி உபகரணம்) மருத்துவச்சான்று பணித்திறன் இழப்புச் சான்று (உதவி சிவில் சர்ஜனால் வழங்கப்பட்டது) ஹாஸ்பிடல் டிஸ்சார்ஜ் சம்மரி முதல் தகவல் அறிக்கை (FIR)

இயற்கை மரணம், ஈமச்சடங்கு

அசல் இறப்பு சான்றிதழ்.

நலத்திட்ட உதவிகள் வங்கி கணக்கில் செலுத்துதல் (ECS)

அரசாணை எண்.102, நாள் – 08.11.2011 (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை)-ன்படி இவ்வாரியங்களின் நலத் திட்ட உதவிகளுக்கான பணப்பயன்கள் நேரடியாக பதிவு பெற்ற தொழிலாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்:-

இந்த காப்பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ.1,00,000/- வீதம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.1,50,000/- வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 23 நோய் பரிசோதனை கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களும் இத்திட்டத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நற்பெயர் பெற்ற தனியார் பள்ளிகளின் மூலம் உயர் கல்வி வழங்கும் திட்டம்:-
அரசுப் பள்ளியில் கல்வி பயின்று, அறிவுக்கூர்மையான கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அந்தந்தப் பகுதியில் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் தரமான கல்வி வழங்கும் வகையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தனியார் பள்ளிகளின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்க தமிழக அரசு ஆணை எண்.14 தொ.வே,(ஐ1) துறை நாள் :31.01.2017 வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கட்டணம் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயக்கப்படும் கட்டணத்தையும், விடுதிக் கட்டணம் ரூ.15,000/- மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும்.

அலுவலக முகவரிகள் :-
  1. தொழிலாளர் ஆணையர்,
    டி.எம்.எஸ். காம்பவுண்ட்,
    தேனாம்பேட்டை, சென்னை – 600 006.
    தொலைபேசி எண். 044-28216529.
    மின்னஞ்சல் முகவரி : comlabtn@gmail[dot]com.
  2. கூடுதல் தொழிலாளர் ஆணையர்,
    எண்.8, ஹாஜா மியான் தெரு,
    காஜா நகர், திருச்சி.
    தொலைபேசி எண். 0431-2421433
    மின்னஞ்சல் முகவரி : jcl_trichy@yahoo[dot]in
  3. தொழிலாளர் இணை ஆணையர்,
    26, 3வது தெரு,
    காஜா நகர், திருச்சி.
    தொலைபேசி எண். 0431-2420600
    மின்னஞ்சல் முகவரி : dclssstryrn@gmail[dot]com
  4. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்,
    8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,
    சென்னை – 34.
    தொலைபேசி எண். 044-28216527, 28216529
    மின்னஞ்சல் முகவரி : tncwwbhead@gmail[dot]com
  5. தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்,
    ஜி/133, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,
    சிந்தாமணி சூப்பர்மார்க்கெட் வணிக வளாகம், அண்ணாநகர் (கிழக்கு), சென்னை – 102. தொலைபேசி எண். 044-26631147/48/49/50
    மின்னஞ்சல் முகவரி : manualboard@gmail[dot]com
  6. தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம்,
    (சமூக பாதுகாப்புத் திட்டம்),
    எண்.19, பெரிய மில் தெரு, விஜயபுரம்,
    திருவாரூர். தொலைபேசி எண். 04366-251210
    மின்னஞ்சல் முகவரி : lossstiruvarur@gmail[dot]com

Comments