Shivratri Story: எப்படி சிவ ராத்திரி உருவானது... ஏன் கொண்டாடப்படுகிறது... புராண கதை தெரியுமா?

Shivratri Story: எப்படி சிவ ராத்திரி உருவானது... ஏன் கொண்டாடப்படுகிறது... புராண கதை தெரியுமா?



இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவ ராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சிவ தளங்கள் அப்பகுதி மற்றும் அந்த தளம் கட்டப்பட்டப்போது அங்கு பின்பற்ற மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஆனால் தளத்தில் உள்ளே உள்ள சிவ லிங்கமும், அவருக்கு உகந்த சிவ ராத்திரி திருநாளை கொண்டாடும் விதம் எல்லா பகுதிகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன.

மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் விரதம் இருக்கும் முறைகளும் கூறப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி திருநாளை எப்படி விரதம் இருந்து கொண்டாடுவது என்பதை “மகா சிவராத்திரி கற்பம்” என்ற சிறிய நூல் கூறுகின்றது.

மகா சிவராத்திரி எப்படி உருவானது?
ஒரு காலத்தில் உலகம் பிரளயம் ஆன போது, அதில் இருந்த உயிரினங்கள் சிவனிடத்தில் ஒடுங்கின. இதனால் அண்ட பிரமாண்ட உலகம் செயலற்று இருந்தன.

கருணையே உருவான அம்பிகை மீண்டும் அண்ட பிரமாண்ட உலகம் மீண்டும் இயங்குவதற்கு உயிரினங்கள் மீண்டும் செயல்பாட்டில் ஈடுபட, கடுமையான, இடைவிடாது தவம் செய்தார். அப்போது இறைவன் சிவபெருமான் உயிரிகளை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களை படைத்தருளினார்.

அம்பிகையின் வேண்டுகோள்:உலகம் மீண்டும் செயல்படத் தொடங்கிய போது, சிவபெருமானிடம், அம்பிகை விரதம் இருந்து வழிபட்ட காலம், உயிரிகளும் இந்த மகா சிவராத்திரி காலத்தில் விரதமிருந்து வழிபடும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி மகா சிவராத்திரி விரத வழிபாட்டு முறையை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தி அடைய வேண்டும் என அம்பிகை வேண்டிக்கொண்டாள்.

சிவராத்திரியன்று வேடனுக்கு முக்தி அளித்த வில்வ இலை!

பக்தி பரவசமூட்டும் மகா சிவராத்திரி வாழ்த்துகள் - ஸ்பெஷல் வாட்ஸ்அப் ஸ்டேடஸ்!

அதைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனாகதி முனிவர் சிவராத்திரி விரதம் இருந்து விருப்பம் நிறைவேறப் பெற்றதாக புராண கதைகள் கூறுகின்றன. அன்று முதல் பல காலமாக இந்த மகா சிவராத்திரி திருநாள் கடைப்பிடிக்கபட்டு வருகின்றது.

Source: tamil.samayam.com